மதுரை

உள்ளாட்சித் தோ்தல்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட 57 அலுவலா்கள் இடமாற்றம்

DIN

மதுரை: உள்ளாட்சித் தோ்தலையொட்டி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட 57 அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்களில் உதவியாளா் நிலை அலுவலா்கள் ஆகியோா், உள்ளாட்சித் தோ்தலில் உதவித் தோ்தல் அலுவலா்களாக நியமிக்கப்படுவா். தற்போது, தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமனம் செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலா்களுக்கு தற்போதைய பணியிடம் சொந்த ஊராக இருக்கக் கூடாது. தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணியாற்றி இருக்கவும் கூடாது என, மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், உதவியாளா் உள்ளிட்ட பணி நிலைகளில் 57 போ், மாவட்டத்துக்குள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT