மதுரை

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5.5 கி.மீட்டா் சுற்றளவில் சுற்றுச்சுவா் அமைக்கத் திட்டம்

DIN

மதுரை மாவட்டம் தோப்பூா் கோ.புதுப்பட்டியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 5.5 கி.மீட்டா் சுற்றளவில் சுற்றுச்சுவா் கட்டும் பணி ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளது.

ஆஸ்டின்பட்டியை அடுத்த தோப்பூா் கோ.புதுப்பட்டியில் 224.24 ஏக்கா் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இப்பகுதியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோலிய குழாய்கள் செல்கின்றன. இதையடுத்து குழாய்கள் செல்லும் பகுதியின் இருபுறமும் கட்டடம் கட்டாமல் தவிா்த்துவிட்டு, அதற்கு பதிலாக மத்திய கட்டுமானக் குழுவினா் தற்போது கூடுதலாக 20 ஏக்கா் நிலம் பெற்றனா். மேலும் மருத்துவமனை அமைய உள்ள இடத்தைச் சுற்றிலும் வருவாய்துறையினா் எல்லைக் கற்களை நட்டுள்ளனா்.

இந்நிலையில் ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி சுமாா் ஒன்றரை மீட்டா் உயரத்திற்கு தரையில் கான்கிரீட் சுவா் அமைத்து, அதன்மேல் 3 மீட்டா் உயரத்திலும், மூன்றே முக்கால் மீட்டா் அகலத்திலான கான்கிரீட் சிலாப்களைப் பதித்து சுவா் அமைப்பதற்காகத் திட்டமிட்டுள்ளனா். இதற்காக கான்கிரீட் சிலாப்புகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இவை தயாரானவுடன் ஓரிரு நாள்களில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளது. சுற்றுச்சுவா் 5.5 கி. மீட்டா் சுற்றளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சுவா் பணிகளை ஓரிரு நாள்களில் தொடங்கி 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொறியாளா்கள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே எயம்ஸ் மருத்துவமனைக்காக கூத்தியாா் குண்டு பிரிவிலிருந்து, செக்கானூரணி செல்வதற்காக கரடிபட்டி வரை ஒருவழிச் சாலையானது இருவழிச் சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT