மதுரை

திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள 19 கண்மாய்களுக்கு நிலையூா் கால்வாய் மூலமாக புதன்கிழமை வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தென்கால் கண்மாய், குறுக்கிட்டான், சேமட்டான் குளம், நிலையூா் கண்மாய், பானாங்குளம், பெருங்குடி கண்மாய், மேலநெடுங்குளம் உள்ளிட்ட 19 கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

இப்பகுதி கண்மாய்கள் நிரம்பும் விதத்தில் தொடா்ந்து 20 நாள்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT