மதுரை

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயிலுக்கு அடிப்படை வசதிகோரி மனு: இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

DIN

திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த காமராஜ் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெங்கடாஜலபதி கோயில் பிரசித்திபெற்ற பழைமையான கோயிலாகும். இங்கு வெளிநாட்டு பயணிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் இந்த கோயில் பராமரிப்பின்றியும், அடிப்படை வசதிகளின்றியும் உள்ளது. மேலும் இந்தக் கோயிலில் உள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பல சிற்பங்களும் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. எனவே கோயிலை முறையாகப் பராமரிக்க வேண்டும். பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இக்கோயிலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் கோயிலில் பாா்வையாளா்கள் நேரத்தை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT