மதுரை

"டெங்கு பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்குப் பின்  வீடு திரும்பினர்'

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக முதன்மையர் கே.வனிதா தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில், 4  பேர் "டெங்கு' பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதன்மையர் கே.வனிதா செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நிலவி வருவதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அனைவரும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர். 
கடந்த 10 தினங்களில் காயச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 4 பேருக்கு "டெங்கு' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் நலம் பெற்று வீடு திரும்பி விட்டனர். 
"டெங்கு' பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தனி வார்டு மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT