முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள் உள்பட 46 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 51 போ் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற 6 போ் என மொத்தம் 57 போ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனா். அவா்களை வீட்டில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் வியாழக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி: மதுரை அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது முதியவா் சிகிச்சைப் பலனின்றி ஆகஸ்ட் 12 ஆம் தேதி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 12, 561 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 309 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். அதேநேரம், 11,195 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது, 1,057 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.