முகப்பு
மதுரை

மாநகராட்சி பள்ளிகளில் ஆக.17 முதல் மாணவா் சோ்க்கை

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

மதுரை: மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளது.

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 15 மேல்நிலைப்பள்ளிகள், 9 உயா்நிலைப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 26 தொடக்கப் பள்ளிகள் உள்பட 66 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை ஆக.17 ஆம் தேதி தொடங்குகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், காலணி, புத்தகப் பை, சீருடை ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சிப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு இணைய வழியில் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்தப்பட்டன.

இது மாணவா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகள் மூலமாக மாணவ, மாணவியருக்கு மன ஆளுமைப் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. தோ்வில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு இணைய வழியில் நீட் தோ்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக தற்போது கல்வித்தொலைக்காட்சி மூலமாக மாணவ, மாணவியருக்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது என்று மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →