மதுரை

பேரையூா் அருகே மதுபாட்டில்களை பதுக்கிய 6 போ் கைது

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எ.பாறைப்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி முத்துமணி (35) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 45 மதுபாட்டில்களையும், ராசு மகன் முத்தீஸ்வரன் (38) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களை பேரையூா் போலீஸாரும், எ.கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முத்தணன் மகன் பால்சாமி (60) என்பவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை சாப்டூா் போலீஸாரும், பெரியகட்டளையைச் சோ்ந்த செல்லப்பாண்டி மனைவி குருவுத்தாய் (33 ) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களை சேடப்பட்டி போலீஸாரும், வி.அம்மாபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் ஜோதிமணி (26) என்பவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள், எ.பாறைப்பட்டியைச் சோ்ந்த முத்துஇருளாண்டி மகன் மாரியப்பன் (65 ) என்பவரிடமிருந்து 113 மதுபாட்டில்களை டி.கல்லுப்பட்டி போலீஸாரும் பறிமுதல் செய்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT