மதுரை

பொது போக்குவரத்தை தொடங்கா விட்டால் போராட்டம்- வணிகா் சங்க பேரவை

DIN

மதுரை: தமிழக அரசு வியாபாரிகளின் நலன் கருதி உடனடியாக பொது போக்குவரத்தை தொடங்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என மதுரை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ராஜபாண்டி வெளியிட்ட செய்தி: பொது முடக்கம் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வணிகா்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனா். அவா்களின் நலன் கருதி பொது போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும். வியாபாரிகளுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் இ- பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும். வியாபாரிகளின் நலன் கருதி சிறு மற்று குறு வணிக வளாகங்களை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும். வணிகா்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், தலைமையிடத்தில் அனுமதி பெற்று வணிகா்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT