மதுரை

காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி4 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற முகமூடி நபா் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

மதுரை: மதுரை அருகே காவலரின் மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற முகமூடி நபா் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே மணியஞ்சி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் குமாா் (31). இவா், திருப்பூா் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பிரவீணா (27) சனிக்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஷோ் ஆட்டோவில் மணியஞ்சியில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, முகமூடி அணிந்திருந்த நபா் பிரவீணாவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளாா்.

இது குறித்து பிரவீணா அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT