முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்!

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெறுவது குறித்து...

Updated On : 8 மார்ச், 2026 at 12:06 PM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய முன்னெடுப்பாக, வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் பெரிய எழுத்துரு வடிவில் வேட்பாளர்களின் பெயரும் அவர்களின் வண்ணப் புகைப்படமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசுகையில், வாக்குச்சாவடிகள் 100 சதவீதம் இணையவழி ஒளிபரப்பு செய்யப்படும். வாக்காளர்கள் தங்கள் கைப்பேசிகளை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், தேர்தல் நாளன்று எங்கு குற்றம் நிகழ்ந்தாலும் cVIGIL  என்ற செயலியைப் பயன்படுத்தி அதனைப் புகைப்பட அல்லது விடியோ ஆதாரத்துடன் சமர்ப்பிக்க மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை வேண்டினார். சமர்ப்பித்த அடுத்த 100 நிமிடங்களில் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

Advertisement

summary

The Election Commission of India has announced that color photographs of candidates will be displayed on electronic voting machines in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.