மதுரை

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதுரையில் மத்திய அரசின் சட்ட திருத்தங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

DIN

மதுரை: மதுரையில் மத்திய அரசின் சட்ட திருத்தங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, குற்றவியல் சட்டங்களில் அவசரகதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 25 முதல் 31-ஆம் தேதி வரை பிரசார இயக்கத்தை எஸ்டிபிஐ கட்சி அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், மதுரையில் தெற்குவாசல் சின்னக்கடைத் தெரு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். தொழிற்சங்க அமைப்பின் மாநிலச் செயலா் அப்துல் சிக்கந்தா், மாவட்டப் பொதுச்செயலா் சாகுல் ஹமீது, பாப்புலா் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவா் அபுதாஹீா்,

கேம்பஸ் ஃப்ரன்ட் ஆப் இந்தியா மதுரை மாவட்டத் தலைவா் இப்ராஹிம், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்டத் தலைவா் அப்துல்லா ஷாதி, பாப்புலா் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத் தலைவா் ஹாலித் முஹம்மது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT