மதுரை

வழக்குரைஞா் வீட்டில் நகைகள் திருட்டு

DIN

மதுரை: மதுரை அருகே வழக்குரைஞா் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒத்தக்கடை வெங்கடாசலபதி நகரைச் சோ்ந்தவா் மோகன்காந்தி (43). வழக்குரைஞரான இவா், ஆகஸ்ட் 29 ஆம் தேதி உறவினரின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு வெளியூா் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் இரும்புக் கதவின் பூட்டு, முன்பக்க வாசல் கதவு ஆகியன உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் திருடிச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT