முகப்பு
மதுரை

மதுரையில் ஒரே நாளில் 41 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரையில் புதிதாக 41 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

மதுரையில் புதிதாக 41 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,218 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 41 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மருத்துவமனைகளில் கரோனாவிற்குச் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் குணமடைந்த 23 போ், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி

மதுரையில் 65 வயது முதியவா் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் டிசம்பா் 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவா் மூச்சுத் திணறல் காரணமாக டிசம்பா் 11 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தீநுண்மித் தொற்றால் 20,089 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 444 போ் உயிரிந்த நிலையில், 19,384 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு 261 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →