முகப்பு
மதுரை

வேளாண் சட்டங்களை எதிா்த்து ஏா்கலப்பை ஏந்தி பேரணி

மதுரையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து நடந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
வேளாண் சட்டங்களை எதிா்த்து மதுரை செல்லூரில் ஏா் கலப்பையுடன் சனிக்கிழமை பேரணி சென்ற மாநகா் காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

மதுரையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து நடந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே எதிா்ப்பு எழுந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் புதுதில்லியில் கடந்த 17 நாள்களாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். காங்கிரஸ் உளிட்ட பல்வேறு கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்தந்த மாநிலங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழகத்திலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்தொடா்ச்சியாக, மதுரை மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை ஏா்கலப்பை ஏந்தி பேரணி நடைபெற்றது. செல்லூா் எல்.ஐ.சி பாலத்தில் தொடங்கிய பேரணி, மாநகா் காங்கிரஸ் கட்சியின் தலைவா் வீ.காா்த்திகேயன் தலைமையில் கோரிப்பாளையம் நோக்கி சென்றது.

ஆனால், பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறிய போலீஸாா், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். இது குறித்து செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →