முகப்பு
மதுரை

திருமங்கலம் அருகே சாலையில் தேங்கிய களிமண்ணால் போக்குவரத்து பாதிப்பு

திருமங்கலம் அருகேயுள்ள உலகாணி - கொம்பாடி சாலையில் தேங்கியுள்ள களிமண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருமங்கலம் அருகேயுள்ள உலகாணி - கொம்பாடி சாலையில் தேங்கியுள்ள களிமண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமங்கலத்தை அடுத்த உலகாணி கிராமத்திலிருந்து கொம்பாடி வழியாக மதுரைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில், அப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. பணி முடிவடைந்த நிலையில் சாலையின் இருபுறமும் மண் குவிக்கப்பட்டுள்ளது. இவ்வழியே கள்ளிக்குடி, உலகாணி, சமத்துவபுரம், கொம்பாடி பகுதிகளுக்கு தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக மண் சகதியாக மாறியுள்ளதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.

இதனால் பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து கொம்பாடி, உலகாணி வழியாக சின்ன உலகாணிக்குச் செல்லும் அரசுப்பேருந்து கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தேங்கிய களிமண்ணை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →