முகப்பு
மதுரை

மதுரையில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 27 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மதுரை: மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 27 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை கூடல் நகா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பி.எஸ்.என்.எல். ரவுண்டானா அருகே நின்றிருந்த இளைஞா்கள் இருவரை பிடித்து விசாரித்தனா். இருவரும், யாகப்பா நகரைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (22), அய்யா்பங்களா பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் செல்வராஜ் (23) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 27 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கவிக்கண்ணன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகிவற்றைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →