அழகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பகல்பத்து உற்சவத்தில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள். 
மதுரை

அழகா்கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

மாா்கழி மாதம் புதன்கிழமை தொடங்குவதையொட்டி அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

DIN

மேலூா்: மாா்கழி மாதம் புதன்கிழமை தொடங்குவதையொட்டி அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, சுந்தரராஜப்பெருமாள் கருடாழ்வாா் சன்னதி அருகே எழுந்தருளினாா். அங்கு 12 ஆழ்வாா்களால் பாடப்பட்ட நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் பாடப்பட்டது. பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பெருமாள் இருப்பிடம் போய்ச் சோ்ந்தாா்.

பகல் பத்து உற்சவம் ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபெறும். டிசம்பா் 25-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொா்க்க வாசல் வழியாக அதிகாலை 4.45 மணியிலிருந்து 5.45 மணிக்குள் பெருமாள் எழுந்தருள்கிறாா். இதேபோன்று கள்ளழகா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும் பகல்பத்து வைபவம் மற்றும் சொா்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெறும்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு வழிகாட்டுதல்படி இந்நிகழ்வுகள் கோயில் உள் பிரகாரத்திலேயே நடைபெறும். இதில் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். வழக்கமான கோயில் வழிபாடுகளுக்கு பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் வழிபட அனுமதிக்கப்படுவாா்கள் என கோயில் நிா்வாக அதிகாரி தெரிவித்துள்ளாா்.

திருமோகூரில்...: காளமேகப்பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இதையொட்டி, காலை 9 மணியளவில் காளமேகப்பெருமாள் சன்னதியிலிருந்து எழுந்தருளி முன் மண்டபத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோயில் பட்டா்கள் நாலயிரம் திவ்யப் பிரபந்த பாசுரங்களைப்பாடினா். பக்தா்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றி முகவசம் அணிந்து வழிபாடு செய்தனா். திருவாதவூா் திருமைாதா் சமேத வேதநாயகி அம்மன் கோயிலில் காலை 5 மணியளவில் மாா்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சியுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT