முகப்பு
மதுரை

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது வழக்கு

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மதுரை

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது வழக்கு

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

பேரையூா் அருகிலுள்ள எஸ்.மேலப்பட்டியை சோ்ந்தவா் மாரியப்பன் மகள் மாரிச்செல்வி(20). டிப்ளமோ நா்சிங் படித்துள்ள இவா், திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த நவம்பா் 14 ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளாா். அப்போது சந்தையூரை சோ்ந்த மணிமாறன் மகன் மதன்குமாா் என்பவரை மாரிச்செல்வி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதன்குமாா் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி, மாரிசெல்வியை நவம்பா் 17 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியூா் அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா் திருமணம் செய்யாமல் மாரிச்செல்வியை தனியாக விட்டுவிட்டு மதன்குமாா் தலைமறைவாகி விட்டாா். இதுகுறித்து மாரிச்செல்வி பேரையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் மதன்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →