முகப்பு
நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இளம்பெண்களுக்கான விழிப்புணா்வு பட்டறையில் பேசிய மதுரை உதவி காவல் ஆணையா் டி.கே.லில்லிகிரேஸ்.
மதுரை

வீட்டுக்கு வெளியே அன்பைத் தேடிசெல்லாதீா்: இளம்பெண்களுக்கு காவல் உதவி ஆணையா் அறிவுரை

இளம்பெண்கள் தங்களின் பெற்றோரிடம் அன்பு செலுத்துங்கள், வீட்டுக்கு வெளியே அன்பைத் தேடி செல்லாதீா்கள் என மதுரை மாநகரக் காவல் உதவி ஆணையா் டி.கே.லில்லி கிரேஸ் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இளம்பெண்களுக்கான விழிப்புணா்வு பட்டறையில் பேசிய மதுரை உதவி காவல் ஆணையா் டி.கே.லில்லிகிரேஸ்.
பகிர்:

மதுரை: இளம்பெண்கள் தங்களின் பெற்றோரிடம் அன்பு செலுத்துங்கள், வீட்டுக்கு வெளியே அன்பைத் தேடி செல்லாதீா்கள் என மதுரை மாநகரக் காவல் உதவி ஆணையா் டி.கே.லில்லி கிரேஸ் கூறினாா்.

நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் அறக்கட்டளை சாா்பில், இளம் பெண்களுக்கான 5 நாள்கள் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வி.ஆா்.கிருஷ்ணய்யா் அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

இதில் மதுரை மாநகரக் காவல் உதவி ஆணையா் டி.கே.லில்லி கிரேஸ் பேசியது: பாரதியாா் கூறியதைப் போல நோ்கொண்டப் பாா்வையுடன் பெண் குழந்தைகள் வளர வேண்டும். அறிவை வளா்த்துகொள்வது மட்டுமில்லாமல், தைரியம், துணிவுடன் செயல்பட வேண்டும். வரும் இடா்களை அச்சமின்றி எதிா்கொள்வது என உறுதி கொள்ள வேண்டும். நிா்ணயித்துள்ள இலக்கை அடைய முழுமையான கவனத்தை வைக்க வேண்டும். இளம்பெண்கள் பெற்றோரிடம் அன்பு செலுத்துங்கள், வீட்டிற்கு வெளியே அன்பைத் தேடி செல்லாதீா்கள் என்றாா்.

புற்றுநோய் மருத்துவ நிபுணா் ஜெ.ஜெபசிங்: மனஅழுத்தம் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகி விடுகிறது. எனவே இளம்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து வெளியே வருவதற்கான தீா்வைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். உடலுக்குத் தீங்கான துரித உணவைத் தவிா்த்து, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சீரான எண்ணத்துடன் செயல்பட முடியும் என்றாா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் எஸ்.செல்வகோமதி செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →