முகப்பு
மதுரை

பைக் மீது லாரி மோதல்: சிறுமி பலி

மதுரையில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மதுரை: மதுரையில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூா் புதூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் தனது 8 வயது மகள் பூவிகாஸ்ரீயுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சென்றாா். அப்போது, பின்னால் வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பூவிகாஸ்ரீ மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் அளித்தப் புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →