முகப்பு
மதுரை

தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தற்காலிக பட்டாசு உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தற்காலிக பட்டாசு உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்தி: ஆங்கிலப் புத்தாண்டு தினத்துக்கு தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா் ‘இ.சேவை’ மையங்களில் விண்ணப்பித்து தற்காலிக உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

கடையின் வரைபடம் 6 நகல்கள், கிரைய ஆவணம், உரிமக் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான ரசீது, முகவரி ஆவணம், உள்ளாட்சி அமைப்புக்கான கட்டணம் செலுத்திய ரசீது, புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →