மதுரை

திருச்சி பாரதிதாசன் பல்கலை. ஆசிரியா் நியமனம் தொடா்பான அறிப்பாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியா் நியமனம் தொடா்பானஅறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்க பொதுச் செயலா் பாலமுருகன் தாக்கல் செய்த மனு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், நியமனம் தொடா்பாக 2019 ஜூலை 8 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணை கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் இருந்து மாறுபட்டிருந்தது. அதில் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் காலியிடங்கள், இடஒதுக்கீட்டு பணியிடங்கள், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் மொத்தப் பணியிடங்களுக்கும் ஒரே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, இடஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பான பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. விதிகளைப் பின்பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT