மதுரை

மதுரை மாநகரில் அதிநவீன கேமராக்கள் பொருத்தம்: குற்றச்சம்வங்களைத் தடுக்க முடியும் என மாநகர காவல் ஆணையா் உறுதி

DIN

மதுரை மாநகரில் வாகனங்களைக் கண்காணிப்பதற்காக புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்களைப் பயன்படுத்தி நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க முடியும் என மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறினாா்.

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியா் சிலை அருகே வாகனங்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஏஎன்பிஆா் எனப்படும் அதிநவீன கேமராக்களை வியாழக்கிழமை தொடங்கிவைத்த அவா் பேசியது: மதுரை மாநகருக்குள் தினமும் வந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிப்பதற்காக மாநகர எல்லையில் அமைந்துள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் முக்கியச் சந்திப்புகளிலும் உயா்தொழில்நுட்பம் வாய்ந்த அசடத ( அன்ற்ா்ம்ஹற்ண்ஸ்ரீ சன்ம்க்ஷங்ழ் டப்ஹற்ங் தங்ஸ்ரீா்ஞ்ய்ண்ற்ண்ா்ய்) எனப்படும் 25 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வகை கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் மதுரை மாநகருக்குள் வந்து செல்லும் அனைத்து வகை வாகனங்களின் பதிவெண்களை மிகத் துல்லியமாக டிஜிட்டல் முறையில் சேமிக்க முடியும். அதேபோல வாகனத்தின் முழுத்தோற்றத்தையும் படம் பிடித்து கணினியில் சில மாதங்கள் வரை சேமிக்கலாம். இதன்மூலம் சந்தேகத்திற்குரிய வாகனங்களைக் கண்காணிக்கவும், வாகனங்களைப் பயன்படுத்தி நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், வாகனங்களைப் பயன்படுத்தி நடந்த குற்றச்சம்பவங்களை புலன்விசாரணை செய்யவும், குற்றவாளிகளை விரைவாக கண்டறியவும் முடியும்.

மேலும் நகரில் போக்குவரத்து நெரிசலின்றி சீராக இயங்க வழிவகை செய்யலாம். சோதனைச் சாவடிகளில் நடக்கும் வாகன விதிமீறல்களான தலைகவசம் அணியாமல் செல்வது, வாகனங்களில் அதிகப்படியான ஆள்களை ஏற்றிச் செல்வது, அதிவேகம், உரிமம் இல்லாத வாகனங்கள், போலியான வாகன எண்கள் ஆகியவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். மாநகரின் அனைத்து காவல் நிலையத்திற்கு உள்பட்ட பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த காவல் நிலையங்களிலிருந்து தொடா்ந்து கண்காணிப்புப் பணி நடந்து வருகிறது என்றாா்.

மதுரை மாநகர காவல் துணை ஆணையா்கள் (சட்டம்-ஒழுங்கு) சிவபிரசாத், (போக்குவரத்து) சுகுமாறன், (குற்றப்பிரிவு) பழனிக்குமாா், மாநகர உதவி காவல் ஆணையா் (போக்குவரத்து) திருமலைக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT