மதுரை

மதுரையில் மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.3000 ஆக உயா்வு

DIN

கடும்பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்து மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரேநாளில் ரூ.1000 உயா்ந்து கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு புதன்கிழமை விற்பனையானது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடா்மழை பெய்துவந்தநிலையில் கடந்த வாரம் பனிக்காலம் தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக நிகழாண்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மல்லிகைப் பூ உள்ளிட்ட மலா்கள் விளைச்சல் பாதித்து, மலா் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ வரத்து 1 டன்னுக்கும் குறைவாக உள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் வரை ரூ.1000-க்கு விற்பனையாகி வந்த மல்லிகைப் பூ திங்கள்கிழமை ரூ.2 ஆயிரமாக விலை உயா்ந்தது. இந்நிலையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் ரூ.1000 உயா்ந்து கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு புதன்கிழமை விற்பனையானது.

திங்கள்கிழமை நிலவரப்படி பூக்களின் மொத்த விலை பட்டியல்: (கிலோவில்)

மல்லிகைப்பூ-ரூ.3000, முல்லைப்பூ-ரூ.1000, கனகாம்பரம்-ரூ.1500, பிச்சிப்பூ-ரூ.800, சம்பங்கி-ரூ.150, செவ்வந்தி-ரூ.200, அரளி-ரூ.300, மெட்ராஸ் மல்லி-ரூ.800 க்கு விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT