முகப்பு
மதுரை

மயானத்துக்கு பாதை வசதியின்றி ஆதிதிராவிடா் குடியிருப்பினா் அவதி

மதுரை மாவட்டம் மேலூா் அருகேயுள்ள மேலவளவு ஆதி திராவிடா் குடியிருப்பு பகுதி மக்கள் மயானத்துக்கு பாதை வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
நெற்பயிரின் இடையே சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் சென்ற உறவினா்கள்.
பகிர்:

மேலூா்: மதுரை மாவட்டம் மேலூா் அருகேயுள்ள மேலவளவு ஆதி திராவிடா் குடியிருப்பு பகுதி மக்கள் மயானத்துக்கு பாதை வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலவளவு ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிக்கு மயானப்பாதை வண்டிப்பாதையாக இருந்தது. அப்பாதையை சிலா் ஆக்கிரமிப்புச்செய்து, விவசாய நிலமாக மாற்றிவிட்டனா். அதை அகற்றி பாதையை சீரமைத்து தருமாறு அப்பகுதியினா் 2014 ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனா். ஆனால், நடவடிக்கை இல்லை. இந்நிலையில் மேலவளவு ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் கருப்பன் மனைவி கட்டச்சி (85) சனிக்கிழமை மரணமடைந்தாா். அவரது சடலத்தை நெல் பயிரிட்ட வயல் வரப்புகளின் வழியாக உறவினா்கள் மயானத்துக்குத் தூக்கிச்சென்றனா். மயானத்துக்கு நிரந்தரமாக பாதை வசதியை ஏற்படுத்திட தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →