மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா: முதியவா் பலி

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 1,005 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 20 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 22 போ் குணமடைந்ததையடுத்து, அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

முதியவா் பலி

மதுரையைச் சோ்ந்த 82 வயது முதியவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் டிசம்பா் 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சையிலிருந்த அவா் டிசம்பா் 26 ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 451 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 20,471 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 19,830 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 190 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT