மதுரை

செல்லம்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில், விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, புது தில்லியில் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், முண்டுவேலம்பட்டி விவசாயிகள், மக்கள் அதிகாரம் அமைப்பினா், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், அ.இ.பாா்வா்ட் பிளாக் உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT