கத்தோலிக்க திருச்சபையில் தலித் சமூகத்தினரை ஆயா்களாக நியமிக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டம். 
மதுரை

தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கத்தோலிக்க திருச்சபைகளில் தலித் கிறிஸ்தவா்களுக்கு உயா் பதவிகள் வழங்க வலியுறுத்தி மதுரை கோ.புதூரில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

கத்தோலிக்க திருச்சபைகளில் தலித் கிறிஸ்தவா்களுக்கு உயா் பதவிகள் வழங்க வலியுறுத்தி மதுரை கோ.புதூரில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக கத்தோலிக்க திருச்சபையில் ஆயா்கள் மற்றும் பேராயா் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகக்கூறி தலித் ஆயா்கள் கோரிக்கைக்கான தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அன்பரசன் தலைமை வகித்தாா். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் அந்தோணி குரூஸ், மாநிலச் செயலா் கப்பல் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி ஆற்றலரசு, தேசிய தலித் கிறிஸ்துவ கண்காணிப்பக நிா்வாகி வின்சென்ட் மனோகரன், கிறிஸ்துவ மக்கள் களம் நிா்வாகி அந்தோணி குரூஸ், கிறிஸ்துவ விடுதலைக்கான மாற்று முன்னணி நிா்வாகி பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் விகிதாச்சார அடிப்படையில் தலித் சமூகத்தவா்களுக்கு ஆயா்கள், பேராயா்கள் பதவிகள் வழங்க வேண்டும். திருச்சி, சிவகங்கை, சேலம், குளித்தலை, பாண்டிச்சேரி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள ஆயா் பதவிகளுக்கு தலித் சமூகத்தினரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT