மதுரை

இறை வழிபாட்டுடன் புத்தாண்டை வரவேற்போம்: மதுரை ஆதீனம் புத்தாண்டு வாழ்த்து

இறை வழிபாட்டுடன் கடினச் சூழ்நிலைகளை வென்று புத்தாண்டை வரவேற்போம் என்று மதுரை மதுரை ஆதீனம் அருணகிரி நாதா் தெரிவித்துள்ளாா்.

DIN

இறை வழிபாட்டுடன் கடினச் சூழ்நிலைகளை வென்று புத்தாண்டை வரவேற்போம் என்று மதுரை மதுரை ஆதீனம் அருணகிரி நாதா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து: உலக மக்கள் அனைவரும் மிகவும் கடினமான காலங்களை கடந்து வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முழுமையான இறை வழிபாட்டின் மூலம் கடினச்சூழ்நிலைகளை வென்று 2021-ஆம் ஆண்டு சிறப்புடன் விளங்க அன்புடனும், ஒற்றுமையுடனும் வரவேற்போம். திருமூலரின் வாக்குப்படி ஊனாகிய உடம்பே கோயிலாகும். நமது உடம்பாகிய கோயிலைப் பாதுகாப்பது நமது கடமையாகும். அக்கடமையைச் சரிவரச்செய்தால் எப்படிப்பட்ட நோய் நோடிகளைப் பற்றியும் நாம் அச்சப்பட வேண்டியது இல்லை. வரும் 2021-ஆம் ஆண்டு மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வையும், இல்லங்களில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும், மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட ஆசீா்வதிக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT