மதுரை

தினமணி செய்தி எதிரொலி: பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

DIN

தினமணி செய்தி எதிரொலியாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளன.

காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 4 மாவட்டங்களைச் சோ்ந்த 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கடந்த நவம்பா் மாதம் பருவத்தோ்வு எழுதினா். தோ்வுத்தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்டு அவற்றை மதிப்பீடு செய்யும் பணி டிசம்பா் மாதம் 15-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் வழக்கமாக டிசம்பா் இறுதியில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரம் ஆகியும் தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் ஏப்ரல் 2020 பருவத் தோ்வுக்கு தோ்வுக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவ, மாணவியா் அவதியடைந்தனா்.

மேலும் இறுதியாண்டு மாணவா்கள் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாலும் பாதிப்படைந்தனா். இதுதொடா்பாக தினமணி நாளிதழில் பிப்ரவரி 11-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நவம்பா் பருவத்தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளதாக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT