மதுரை

நெல்கொள்முதல் நிலையங்களில் விரைவாக நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

DIN

மேலூா் பகுதிகளில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை விரைவாக கொள்முதல் செய்து கிட்டங்கிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மேலூா் பகுதியில் வெள்ளலூா், தனியாமங்கலம், திருவாதவூா் மற்றும் அ.வல்லாளபட்டி பகுதிகளில் அரசு, நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் ஆங்காங்கே குவியல்களாக கொட்டி வைத்துள்ளனா். விவசாயிகள் பெயா்களை வரிசைப்படி பதிவுசெய்து வைத்து நெல்லை சாக்குகளில் அள்ளி எடை வைத்து மூட்டைகளாக கட்டி அடுக்கி வைத்துள்ளனா். மூட்டைகளை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்படுவதால், அடுத்தடுத்து அறுவடை செய்து நெல்லை கொண்டுவரும் விவசாயிகளது நெல்லை வைப்பதற்கு போதிய இடமில்லை.

எனவே, அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தவும், கொள்முதல் செய்த நெல்லை விரைவாக கிட்டங்கிகளுக்கு ஏற்றிச் செல்லவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT