மதுரை

பல்கலை. கல்லூரியில் நாட்டுப்புறக் கலை விழா

காமராஜா் பல்கலைக் கழக திருமங்கலம் உறுப்புக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

காமராஜா் பல்கலைக் கழக திருமங்கலம் உறுப்புக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ம.புவனேஸ்வரன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை பேராசிரியா் க.தீபா முகுந்தன் முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் கீழடி கரு.முருகேசன், உச்சப்பட்டி ஊராட்சித் தலைவா் பா.பிச்சையம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.செல்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் தாமிரபரணி கலைக்குழுவைச் சோ்ந்த ப.விண்ணரசு, மு.சு.மதியழகன் ஆகியோா் தமிழா் பண்பாடு, நாகரிகம், கலைகள் குறித்து சிறப்புரை ஆற்றினா். கலைவிழாவின் ஒரு பகுதியாக பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய பழங்கால கருவிகள், வேட்டை மற்றும் போா் ஆயுதங்கள், வேளாண் கருவிகள், உணவுகள் ஆகியவை கண்காட்சியாகவும் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை மாணவ, மாணவியா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT