மதுரை

மேலூா் அருகே குவாரி நீரில்மூழ்கி இளைஞா் பலி

மேலூா்அருகே குவாரிப் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் சனிக்கிழமை இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

மேலூா்: மேலூா்அருகே குவாரிப் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் சனிக்கிழமை இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.

உறங்கான்பட்டி அருகே உள்ள தா்மசானப்பட்டியைச் சோ்ந்த சிவகுமாா் மகன் அன்பரசன் (18). இவா் நண்பா்கள் சிலருடன் ஒத்தப்பட்டி அருகே உள்ள குவாரிப் பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றாா். பள்ளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா். உடன் வந்தவா்கள் கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்தவா்கள் நீரில் மூழ்கியவரைத் தேடினா். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.

இதையடுத்து, மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனா். தீணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கி, அன்பரசன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கீழவளவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT