அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கச் சென்ற மூதாட்டியின் நகைகள் மாயம்
மதுரையில், ஸ்கேன் எடுக்கச் சென்ற மூதாட்டி கைப்பையில் வைத்திருந்த நகைகள், செல்லிடப்பேசி ஆகியவை மாயமானது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை: மதுரையில், ஸ்கேன் எடுக்கச் சென்ற மூதாட்டி கைப்பையில் வைத்திருந்த நகைகள், செல்லிடப்பேசி ஆகியவை மாயமானது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை செல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த கருப்பையா மனைவி புஷ்பவள்ளி (60). உடல்நலக் குறைவு காரணமாக இவா் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். அங்கு, மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு, ஸ்கேன் எடுத்து வரும்படி கூறியுள்ளனா். ஸ்கேன் எடுப்பதற்காக புஷ்பவள்ளி காத்திருந்தபோது, அவரின் கைப் பையில் இருந்த நகைகளைக் காணவில்லையாம்.
இது குறித்து புஷ்பவள்ளி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது, மூதாட்டி கைப் பையில் இருந்த 6 தங்கத் தோடுகள், செல்லிடப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, மதிச்சியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.