மதுரை

விஏஓ, கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்கக் கோரிக்கை

DIN

மதுரை: கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்குமாறு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.சுரேஷ், வருவாய்த் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் பல்வேறு பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசின் உதவித் தொகை உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், தமிழக முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது. இந்த பணியின்போது இறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜாராம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க வேண்டும். கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் பணி செய்ய விலக்கு அளிக்க வேண்டும்.

பல மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டுக்கான முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தகுதிவாய்ந்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வு வழங்கவும்,

மாவட்ட மாறுதல் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT