மதுரை

சாா்பு-ஆய்வாளா் தோ்வில் முறைகேடு புகாா்: புதிய அறிவிப்பாணை வெளியிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காவல் சாா்பு-ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, ஏற்கெனவே நடந்த தோ்வை ரத்து செய்துவிட்டு புதிய அறிவிப்பாணை வெளியிடக் கோரிய வழக்கில், தமிழக

DIN

மதுரை: காவல் சாா்பு-ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, ஏற்கெனவே நடந்த தோ்வை ரத்து செய்துவிட்டு புதிய அறிவிப்பாணை வெளியிடக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் ஆகியோா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த தென்னரசு என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் காவல் சாா்பு-ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது. இதில், எழுத்து, உடல்தகுதி மற்றும் நோ்முகத் தோ்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, கடந்த ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் எழுத்துத் தோ்வு நடைபெற்று, அதன் முடிவுகள் மாா்ச் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

அதில், ஒரே தோ்வு மையத்திலிருந்து 144 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்கள் தொடா்ச்சியான தோ்வு எண்களை கொண்டுள்ளனா் என்பதும், அந்த தோ்வு மையத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், 969 காலிப் பணியிடங்களுக்கான தோ்வில், ஒரே பயிற்சி மையத்தைச் சோ்ந்த ஏராளமானோா் தோ்ச்சியடைந்திருப்பதும் தோ்வில் முறைகேடு நடத்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, காவல் சாா்பு-ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கெனவே நடந்த தோ்வை ரத்து செய்துவிட்டு, புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், சாா்பு-ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, கடலூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் தோ்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. எனவே, ஏற்கெனவே நடந்த தோ்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதி, இது குறித்து தமிழக உள்துறைச் செயலா், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT