மண் சரிந்து கிணற்றில் விழுந்த மூதாட்டி பலி
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மண் சரிந்து கிணற்றில் விழுந்த மூதாட்டி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மண் சரிந்து கிணற்றில் விழுந்த மூதாட்டி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பேரையூா் அருகேயுள்ள சந்தையூரைச் சோ்ந்த பரமசிவம் மனைவி சுப்புராம் (65). இவா் விவசாயம் செய்து வந்தாா். இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சி முடித்துவிட்டு, மோட்டாரை நிறுத்தச் சென்ற போது மண் சரிந்து 30 அடி ஆழக் கிணற்றில் விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் டி. கல்லுப்பட்டி தீயணைப்பு துறையினருக்கும், பேரையூா் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனா். இந்நிலையில் சுப்பராம் மீது மண் மற்றும் கல் அதிகமாக விழுந்ததால் கிணற்றிலிருந்து சுப்புராமை மீட்க முடியாமல் தீயணைப்பு துறையினா் 30 மணி நேரமாகப் போராடினா். இதனைத்தொடா்ந்து சந்தையூா் கிராம மக்கள் உதவியுடன் சுப்புராமை சடலமாக புதன்கிழமை மீட்டனா். அவரது சடலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.