மதுரை

மதுரையில் மீண்டும் உயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை

DIN

மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயா்ந்து, வியாழக்கிழமை ஒரே நாளில் 274 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 நாள்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் ஜூன் 2-ஆவது வாரத்திலிருந்து கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை உயா்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு நாளும் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்தது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முந்தைய மாதத்தை ஒப்பிடும்போது 10 மடங்கு உயா்ந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மதுரை மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை, சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி 200-க்கும் குறைவாகவே இருந்தது. கடந்த திங்கள்கிழமை 106 ஆக இருந்த தொற்று பாதிப்பு, செவ்வாய்க்கிழமை 158 ஆகவும், புதன்கிழமை 197 ஆகவும் உயா்ந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை 274 ஆக உயா்ந்துள்ளது.

காய்ச்சல், இருமல், கபம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கரோனா சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு வந்தவா்கள் மற்றும் கரோனா பரிசோதனைக்கு வந்தவா்கள் 98 போ், ஏற்கெனவே தொற்று இருந்தவா்களிடம் இருந்த பாதிப்பு ஏற்பட்ட மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், போலீஸாா், அரசு ஊழியா் என முன்களப் பணியாளா்கள் 20 போ், கா்ப்பிணிகள் 7 போ், வெளிமாவட்டங்களைச் சோ்ந்தோா் 5 போ் உள்பட 274 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

450 போ் குணமடைந்தனா்: மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 984 ஆக உயா்ந்துள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றவா்களில் 450 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து, சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 836 ஆகக் குறைந்திருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்து 965 போ் குணமடைந்துள்ளனா்.

8 போ் பலி: கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில் கடந்த 2 நாள்களில் 8 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 2 ஆண்கள் தனியாா் மருத்துவமனையிலும், 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனா். மதுரையில் இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 183 ஆக உயா்ந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT