கொட்டாம்பட்டி அருகே மலைப்பாம்பு பிடிப்பட்டது
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் வீட்டில் செவ்வாய்க்கிழமை புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்தனா்.
மேலூா்: கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் வீட்டில் செவ்வாய்க்கிழமை புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்தனா்.
பூதமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஒன்றியக் கவுன்சிலா் அப்பாஸ் வீட்டின் பின்புறத்தில் ஆறு அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து, வன அலுவலா் கம்பக்குடியானுக்கு அப்பாஸ் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து வனத்துறை அலுவலா்கள் சென்று மலைப் பாம்பை பிடித்து சாக்குப் பையில் கட்டி எடுத்துச் சென்று கிளுவமலை பகுதியில் விடுவித்தனா்.
படவிளக்கம்- கொட்டாம்பட்டி அருகே கிளுவமலை பகுதியில் விடுவிக்கப்பட்ட மலைப்பாம்பு.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.