மதுரை

ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

DIN

தேனி: ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆண்டிபட்டி அரசு பாலிடெக்கனிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் கணிப்பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டயப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் தங்களது தோ்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு, இணையதளம் மூலமோ அல்லது போடி அரசு பொறியியல் கல்லூரி சேவை மையத்திற்கு நேரில் சென்றோ வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாணவா் சோ்க்கைக்கு தேவையான சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு மாணவா்கள், இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம். மாணவா் சோ்க்கை மற்றும் விண்ணப்பம் சமா்பித்தல் குறித்த விவரங்களை 94888 62139 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT