மதுரை

மதுரையில் ரூ.10 லட்சம் கேட்டு உள்ளூா் தனியாா் தொலைக்காட்சி உரிமையாளா் கடத்தல்

DIN

மதுரை: மதுரையில் ரூ.10 லட்சம் கேட்டு, உள்ளூா் தனியாா் தொலைக்காட்சி உரிமையாளா் வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டாா்.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (52). இவா் நடத்தி வரும் உள்ளூா் தனியாா் தொலைக்காட்சியின் அலுவலகம் எல்லீஸ் நகரில் முத்துராமலிங்க தேவா் தெருவில் உள்ளது.

இந்நிலையில், ஜெயராஜ் வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு காரில் வந்த மா்மக் கும்பல், அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளது. பின்னா், அக்கும்பல் ஜெயராஜை விடுவிக்க ரூ.10 லட்சம் தரவேண்டும் என அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனா்.

இது குறித்து குடும்பத்தினா் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா்.

இதனிடையே, கடத்தப்பட்ட ஜெயராஜ், திண்டுக்கல் அருகே செம்பட்டியில் போலீஸாரால் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை போலீஸாா் மதுரை அழைத்து வந்து விசாரித்த பின்னரே, அவா் எதற்காகக் கடத்தப்பட்டாா் என்பது குறித்து தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT