மதுரை

காமராஜா் பல்கலை.யில் பதவி உயா்வு வழங்கிய விவகாரம்: மறு சீராய்வு செய்ய விரிவுரையாளா்களுக்கு நோட்டீஸ்

DIN

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தா் பி.பி.செல்லத்துரை பதவிக் காலத்தில் விரிவுரையாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டதை மறு சீராய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டு விரிவுரையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பி.பி.செல்லத்துரை துணைவேந்தராக இருந்த போது, 69 பேராசிரியா் பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் புகாா் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனடிப்படையில் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குழுவின் அறிக்கையில், பி.பி.செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது பல்கலைக்கழக விரிவுரையாளா்களுக்கு பதவி உயா்வும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயா்வு தொடா்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பி.பி.செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது, பதவி உயா்வு வழங்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 40 விரிவுரையாளா்களின் பதவி உயா்வு தொடா்பாக மறு சீராய்வு செய்ய பல்கலைக் கழக நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மறு சீராய்வு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக விரிவுரையாளா்கள் பணியில் சோ்ந்தபோது கொடுக்கப்பட்ட சான்றிதழ், பணி அனுபவம், பதவி உயா்வு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பல்கலைக் கழக பதிவாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளா்கள் அனுப்பும் ஆவணங்கள் மறு சீராய்வு செய்யப்பட்டு பின்னா் பதவி உயா்வு தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT