மதுரை

கரோனா நிவாரண நிதி வழங்க தனி வங்கிக்கணக்கு அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

கரோனா பாதிப்பிற்காக நிதி வழங்குவதற்காக தனியாக வங்கிக்கணக்கைத் தொடங்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பாதிப்புக்கும், பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உதவும் வகையில் பலரும் நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளனா். ஆனால் மாவட்ட ஆட்சியா் அந்த நிதி உதவியைப் பெற தயாராக இல்லை. எனவே இதுதொடா்பாக உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தா் ஆகியோா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் முறையிட்டாா்.

அதற்கு நீதிபதிகள், முதல்வா் நிவாரண நிதி போன்று நிவாரண நிதிகளுக்காக தனியாக வங்கிக்கணக்கு இருப்பது போல, கரோனா பாதிப்பிற்காக நிதி வழங்க தனியாக வங்கிக்கணக்கை உருவாக்கலாம் என அரசுக்கு அறிவுறுத்தினா். மேலும் அவ்வாறு தனிக்கணக்கு உருவாக்கப்பட்டால், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளா்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT