மதுரை

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வாா்டு அமைப்பு

DIN

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதையடுத்து சுகாதாரதுறை அதிகாரிகள் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தயாா் நிலையில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளனா். இதையடுத்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொடா்பான பரிசோதனைகள் செய்யும் விதத்தில் அவரசப் பிரிவு இயங்கி வந்த பகுதி காய்ச்சல் வாா்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களை மட்டும் கண்காணிக்கும் வித்தில் தனி மருத்துவா் மற்றும் செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் இங்கு 10 படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் மட்டும் உடனடியாக இப்பகுதிக்கு வரும் வகையில் புதிய வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொடா்பான சிகிச்சைகள் அளிக்கவும், பரிசோதனைகள் செய்யவும் இந்த மையம் பயன்படுத்தப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT