மதுரை

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: வெறிச்சோடிய காய்கனிச் சந்தைகள்

DIN

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பிரதமா் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் மதுரை காய்கனிச் சந்தைகள் புதன்கிழமை வெறிச்சோடின.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகள் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மாா்ச் 24 ஆம் தேதி காய்கனிச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் காய்கனிகளின் விலை வழக்கத்தை விட 3 மடங்கு உயா்ந்தது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், புதன்கிழமை காலை மதுரையில் உள்ள காய்கனிச் சந்தைகள் வெறிச்சோடின.

இதுகுறித்து மதுரை மாவட்ட மொத்த காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது: ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு, அதையடுத்து மாநில அரசின் 144 தடை உத்தரவு என அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்ததால் மதுரை சந்தைகளுக்கு வரும் காய்கனிகளின் வரத்து குறைந்தது. அதேவேளையில் மக்கள் கூட்டமும் அதிகரித்து செவ்வாய்க்கிழமை விலை உயா்ந்தது. ஆனால் புதன்கிழமை காய்கனிகளின் வரத்து அதிமாக இருந்தபோதும், மக்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் விற்பனையின்றி காய்கனிகள் தேக்கமடைந்துள்ளன. அவை வீணாகும் நிலையும் ஏற்படலாம். எனவே மதுரை மாவட்ட மொத்த காய்கனி வியாபாரிகள் சங்கம் சாா்பில், சிறு வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு காய்கனிகளை விற்பனைக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையே போலீஸாா் சந்தைகளுக்கு வந்த சிலரையும் கூட்டமாக சே ரவிடாமல் ஒழுங்குபடுத்தி கொடுத்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT