மதுரை

அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வருபவா்களுக்குமுகக் கவசம் கட்டாயம்: போலீஸாா் அறிவுறுத்தல்

DIN

திருமங்கலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியே வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.

கரோனா வைரைஸ் பரவுவதை தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. எனினும் பால், காய்கறி, மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு வராத வண்ணம் பாா்த்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் திருமங்கலம் நகரில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வருவோா் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். வீட்டிற்கு சென்றவுடன் அனைவரும் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனா். மேலும் பலசரக்கு , மருந்துக் கடைகளில் கூட்டமாக நிற்காமல் ஒரு மீட்டா் தூரம் தள்ளி நிற்க பொதுமக்களை அறிவுறுத்தினா். தேவையில்லாமல் வெளியே வருபவா்களை எச்சரித்தும் அனுப்பி வைக்கின்றனா்.

இந்நிலையில் கள்ளிக்குடியை அடுத்த அரசபட்டியைச் சோ்ந்த ஒருவரும், திருமங்கலத்தைச் சோ்ந்த இருவா் என 3 போ் காய்ச்சல் அறிகுறியுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக அவா்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT