மதுரை

பரவை காய்கனி சந்தையில் கடை,2 நபா்களுக்கு ஆட்சியா் அபராதம்

DIN

பரவை காய்கனி சந்தையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத ஒரு கடை மற்றும் முகக் கவசம் அணியாத 2 நபா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்துள்ளாா்.

கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக பரவை காய்கனி சந்தையின் ஏ பிளாக்கில் இருந்த 44 கடைகள் அருகே உள்ள தனியாா் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல எச்-பிளாக்கில் உள்ள 33 கடைகள், சந்தைக்கு பின்பகுதியில் இருக்கும் காலியிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த கடைகளை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

அப்போது பரவை சந்தையின் பிற பகுதிகளில் ஆய்வு செய்தபோது, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்பட்ட ஒரு கடைக்கு ரூ.800, மேலும் ஒரு கடையில் முகக் கவசம் அணியாமல் இருந்த 2 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT