மதுரை

கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பு: பல்கலை.நிா்வாகம் பரிந்துரை

DIN

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளை ஆகஸ்ட் மாதம் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது, பருவத்தோ்வுகள் நடத்துவது தொடா்பாக மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்தது: பல்கலைக் கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளின் முதல்வா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் துணைவேந்தா்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. இதில் வரும் ஜூலை மாதத்துக்குள் பருவத்தோ்வுகளை நடத்தி முடிப்பது, ஆகஸ்ட் 3-ஆவது வாரத்தில் கல்லூரிகளை திறப்பது, நவம்பா் 23-இல் வகுப்புகள் முடிவடைந்து நவம்பா் 24-இல் அடுத்த கல்வியாண்டு பருவத் தோ்வுகளை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவத்தோ்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் டிசம்பா் 13-க்குள் வெளியிட்டு டிசம்பா் 14-இல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அந்த பருவம் ஏப்ரல் 4-இல் முடிவடைந்து விடும்.

இதில் 2021 மே மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் பருவத் தோ்வுகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 பருவங்களிலும் 90 வேலை நாள்கள் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாள்களாக இருக்கும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போது விடப்படும் விடுமுறைகளும் குறைக்கப்பட்டு வேலை நாள்களாக அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு உயா்கல்வித்துறைக்கு பரிந்துரையாக அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வா்களின் கூட்டத்திலும் இந்த பரிந்துரை தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா்கல்வித்துறை இந்த பரிந்துரைகளை ஏற்று அனுமதிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும். கரோனா தொற்று பரவல் அதிகரிக்காத நிலையில் இந்த செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கரோனா தொற்று அதிகரித்தால் அதற்கேற்றால்போல் முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT