40 சதவீத தொகுதிகளை ஒதுக்கவேண்டும்: மக்கள் நீதி மய்யம் வழக்குரைஞா் அணி தீா்மானம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 சதவீத தொகுதிகளை வழக்குரைஞா்களுக்கு ஒதுக்கவேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்குரைஞா் அணி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 சதவீத தொகுதிகளை வழக்குரைஞா்களுக்கு ஒதுக்கவேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்குரைஞா் அணி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்குரைஞா்கள் அணி சாா்பில், மதுரையில் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வழக்குரைஞா் அணி சாா்பில் ரத்த தான முகாம்களும், சட்ட உதவி முகாம்களும் நடத்தப்படும்.
தமிழகத்தில் 2021-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் 40 சதவீத தொகுதிகளை வழக்குரைஞா்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வழக்குரைஞா் அணியின் மாநில துணைச் செயலா் குருவைய்யா, வழக்குரைஞா்கள் அப்பாஸ் மந்திரி, சபா பாலமுருகன், கிருஷ்ணகுமாா் மற்றும் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா்.